Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விளையாட்டுத்துறை அமைச்சின் கேள்விப்பத்திர நடவடிக்கையில் ஈடுபடும் மர்மநபர்

November 28, 2017 4:31 PM
1 0

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் கேள்விப்பத்திர நடவடிக்கையில் மர்ம மனிதர் ஈடுபடுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சின் பொறியியல் பிரிவுடன் எப்போதும் தொடர்புகளை கொண்டுள்ள இனம்காணப்படாத ஒருவர் தகவல்களை பெற்று கேள்விப்பத்திர ஒழுங்குகளை மீறி செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மனிதர் விளையாட்டுத்துறை அமைச்சுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டில்லாதவார்.

எனினும் இவரை, விளையாட்டுத்துறை அமைச்சின் ரேஸ்கோஸ் மைதானப்பகுதியில் காணமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் விளையாடத்துறை அமைச்சு கண்டு கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மனிதரின் செயற்பாட்டுடன் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான கேள்விப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0