Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு கவலை தரும் விடயம்!

February 6, 2018 3:34 PM
5 0

வெளிநாட்டு பயண டிக்கெட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விரைவில் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் நேரடியாக விமான சேவை வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரணமாக விமான சேவை நிறுவனங்களின் செலவு நூற்றுக்கு 30 வீதமானவைகள் எரிபொருளினால் ஏற்படுகின்றன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரேன்ட் சந்தையில் கச்சாய் எண்ணெயின் ஒரு பீப்பாய் 68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கடந்த வருடம் ஜுன் மாதத்தில் இருந்து தற்போது வரை நூற்றுக்கு 50 வீதம் எண்ணை விலை அதிகரித்துள்ளது.

எண்ணெய் விலை 60 - 70 டொலர் விலையில் காணப்பட்டால் அதனை தாங்கி கொள்ள முடியும், ஏதாவது ஒரு வகையில் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் 70 டொலரை கடந்தால் நிச்சியமாக விமான டிக்கட் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Alexandre de Juniac தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0