Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விறுவிறுப்பான வாக்களிப்பில் பூநகரி பொது மக்கள்!

February 10, 2018 6:26 AM
4 0
விறுவிறுப்பான வாக்களிப்பில் பூநகரி பொது மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளிற்கான தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று சபைகளிலும் 86734 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதே வேளை மூன்று சபைகளிலும் 40 நேரடி தெரிவு மற்றும் 26 விகிதாசார தெரிவுகளின் மூலம் 66 ஆசனங்களை நிரப்புவதற்கு 215 பெண் வேட்பாளர்கள் அடங்கலாக 638பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0