Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விமானப் பணிப்பெண்களை பாட்டிகள் என விமர்சித்த கத்தார் ஏர்வேஸ் நிர்வாகி மன்னிப்பு கேட்டார்..!!

July 16, 2017 4:00 PM
2 0

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பெக்கர் கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் அமெரிக்க விமானச் சேவை நிறுவனங்களை படுமட்டமாக விமர்சித்தார்.

பயணிகளுக்கான சேவையை பொருத்தமட்டில் அமெரிக்க விமானங்களின் குப்பைக்கு நிகரானது என குறிப்பிட்ட அவர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் 26 வயதுக்கு குறைவானவர்களே… ஆனால், அமெரிக்க விமானங்களில் செல்லும் பயணிகளுக்கு உபச்சாரம் செய்யும் பணிப்பெண்கள் பெரும்பாலும் பாட்டிகளாகவே இருக்கிறார்கள் என அவர் கிண்டலடித்தார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0