Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விஜயகலா குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு

August 11, 2018 3:11 PM
2 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கருத்தைத் தொடர்ந்து விஜயகலா தனது ராஜாங்க அமைச்சர் பதவியையம் இழக்க நேரிட்டிருந்தது.

விஜயகலாவின் கருத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

விஜயகலாவின் கூற்று தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் உண்டு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0