Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விசாரணைக்காக இலங்கை வந்த அதிகாரிகள்

October 12, 2017 4:58 AM
1 0

தாய்வான் பா ஈஸ்ட்டர்ன் வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அதிகாரிகள் இருவர் இலங்கை வந்துள்ளனர்.

பா ஈஸ்ட்டர்ன் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொள்ளையடித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவே அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

தாய்வான் விசாரணை அதிகாரி ஒருவரும், பா ஈஸ்ட்டர்ன் வங்கி அதிகாரி ஒருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வங்கிக் கொள்ளை தொடர்பில் கைது செய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீல முனசிங்ஹ எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0