Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து அமைப்புகள் வெளிநடப்பு

July 13, 2017 5:14 PM
1 0
வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து அமைப்புகள் வெளிநடப்பு

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து அப்பிரதேச கிராம மட்ட அமைப்புகள் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளன.

வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதியமைச்சர் எம்எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாத்திரமே பங்கேற்றனர். கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை வெளிநடப்பு செய்தனர்.

இதற்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்பை வெளியிட்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினையும் நடாத்தினர்.

அவர்களது போராட்டங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த ஆர்பாட்டக்காரர்கள், எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை வழங்கிய பிரதேச செயலாளரை திடீரென கொழும்புக்கு இடமாற்றியுள்ளார்கள். இதற்கான காரணத்தை இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால் நான்கு தினங்களாகியும் இதுவரை எமக்கு எந்த பதிலும் வழங்கப்படாத நிலையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடாத்துகிறார்கள்.

எமக்கு தீர்வு வழங்காத பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தேவையில்லை என கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளோம் என வெளிநடப்புச் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இடம் பெற்றதுடன் பிரதேச குடி நீர் பிரச்சினை, பிரதேச மக்களது வாழ்வாதார பிரச்சினை, பிரதேச வீதிகள் அபிவிருத்தி பிரதேச கல்வி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0