Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வவுனியாவில் திருட்டு: மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள்

December 5, 2017 10:14 AM
1 0

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினை உடைத்து நேற்று மாலை அங்கிருந்த நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை யாரும் இல்லாத போது பின் வேலி வழியாக சிலர் உள்நுழைந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்கள் வீட்டுக் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த சங்கிலி, தோடு, மோதிரம் உள்ளிட்ட ஐந்து பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் வசிப்பவர்கள் அன்றிரவு வீட்டிற்குச் சென்ற போதே தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸாரிடம் அவர்கள் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர்.

வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0