Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வவுனியா நகரசபையை கைப்பற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி

April 16, 2018 5:13 AM
4 0

வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0