Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து யாழ்.நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருவர் தப்பி ஓடினர்!

December 5, 2017 12:30 PM
2 0
வவுனியா சிறைச்சாலையிலிருந்து யாழ்.நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருவர் தப்பி ஓடினர்!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருவர் இன்று அதிகாலை தப்பி ஓடி பின்னர் கைதாகியிருக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவ​ரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, மூவருக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வழங்கப்படும் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்திருக்கிறார்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0