Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வருமானம் கொழிக்கும் வனப்பூங்காவாக மாற்றம் பெறும் யால சரணாலயம்

February 15, 2018 1:46 PM
8 0

இலங்கையில் உள்ள வனப்பூங்காக்களில் கடந்த வருடம் யால வனப்பூங்கா அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் யால வனப்பூங்காவிலிருந்து அரசாங்கத்துக்கு 700.58 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள வனப்பூங்காக்களில் கடந்த 2017ம் ஆண்டு அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த இடமாகவும் யால வனப்பூங்கா விளங்குகின்றது. இங்கு கடந்த ஆண்டு 397, 122 பேர் வருகை தந்துள்ளனர்.

இவர்களில் 207,927 பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாகும். 189,195 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கடந்த ஆண்டில் யால வனப்பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

இரண்டாவதாக அதிகூடிய வருமானம் ஈட்டிய வனப்பூங்காவாக உடவளவ வனப்பூங்கா காணப்படுகின்றது. இந்த வனப்பூங்கா கடந்த ஆண்டில் 358.44 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் உடவளவை வனப்பூங்காவுக்கு வருகை தந்த 236,867 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கையின் வனப்பூங்காக்களுக்கு 1635, 467 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அதன் மூலம் 2040.51 மில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0