Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வடமாகாண முதலமைச்சர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

June 12, 2018 2:13 PM
2 0

வடமாகாண சபையின் கவனயீனத்தாலேயே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்கள்.

இன்று நடைபெற்ற வடமாகாண சபையின் 124வது அமர்வில் மேற்படி செயலணி தொடர்பாக ஆராயப்படும்போதே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.

மேற்படி செயலணியின் 1ம், 2ம், 3ம் கூட்டங்களுக்கு வடமாகாண சபைக்கு அழைப்பு கிடைக்கவில்லை. 4ம் கூட்டத்திற்கு அழைப்பு கிடைத்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் முதலமைச்சர் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றார்.

அதன் பின்னர் செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லையா? கிடைத்திருந்தால் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியினால் வடக்கின் மீள்குடியேற்றத் திற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான கூட்டம் கூட்டப்பட்டது.

இதற்கமைய மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடாத்தி ஒரு மீள்குடியேற்ற பொறிமுறையை தயாரித்திருந்தார்.

அந்த செயலணி உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு முகம் அவ்வளவு சரியில்லை.

இதற்கிடையில் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உருவாக்கிய மீள்குடியேற்ற பொறி முறை தொடர்பில் வடமாகாணசபை கவனம் செலுத்தவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்திய அமைச்சர் றிஷாட் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்கினார் என கூறினார்.

மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கத்தின் மீள்குடியேற்ற பொறிமுறையினை ஜனாதிபதியே ஏற்றுக் கொண்டார் என கூறினார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0