Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வடகொரியாவிற்கு இனிமேல் இலங்கையில் தடை!

October 10, 2017 5:24 AM
3 0
வடகொரியாவிற்கு இனிமேல் இலங்கையில் தடை!

வடகொரியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத் தொடர்புகளுக்கு தடை விதித்து, விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் நேற்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கு இலங்கையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும், நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் சொத்துக்களை வாங்குவதற்கும், இலங்கையர்கள் வடகொரியாவிடம் நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்வது மற்றும் தொழில்நுட்ப பயிற்சியினைப் பெற்றுக் கொள்வது ஆகியவற்றிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேபோல, வடகொரிய நிறுவனங்கள் இலங்கையில் புதிய கிளைகளை உருவாக்குதல், அல்லது துணை நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0