Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வடகொரியாவுக்கு எதிரான தடைகள் குறித்து விவாதிக்க தயார்! அரசாங்கம்

October 10, 2017 2:02 AM
1 0

வடகொரியாவுக்கு எதிரான தடைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்த தயார் எனஅரசாங்கம் அறிவித்துள்ளது.

வடகொரியா விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் யாவை, பொருளாதாரத் தடை விதிப்பதாயின் எவ்வாறான பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதமொன்றை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0