Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வடகொரியா தயாராகிவிட்டது: அடுத்த சில நாட்களில் நடக்கவுள்ளது என ஜப்பான் எச்சரிக்கை

November 28, 2017 1:52 AM
3 0

வடகொரியா அடுத்த ஏவுகணை சோதனைக்கு தயாராகிவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா தன்னுடைய ஆயுத பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜப்பானின் செய்தி நிறுவனம் ஒன்று, வடகொரியா அடுத்த ஏவுகணை சோதனைக்கு தயாராகிவிட்டதாகவும், இதை ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வடகொரியா மேற்கொள்ளவிருக்கும் இந்த சோதனை அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும், இது வடகொரியா இராணுவத்தின் குளிர்கால பயிற்சி சோதனையாக நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியா கிறிஸ்துமஸ் தினத்தின் போது, அமெரிக்காவை நோக்கி ஏவுகணை ஏவ திட்டமிட்டுள்ளதாக, முன்னரே செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0