Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வடக்கு, தெற்கு அரசியல்வாதிகள் இனவாத அரசியலில் ஈடுபடுகின்றனர்

February 6, 2018 6:46 PM
5 0

வடக்கு, தெற்கு அரசியல்வாதிகள் இனவாத அரசியலில் ஈடுபடுகின்றனர் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கின் அரசியல்வாதிகள் மட்டுமன்றி தெற்கின் அரசியல்வாதிகளும் அரசியல் மேடைகளில் ஒரே விதமாகவே செயற்படுகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது மக்களுக்கு சமஸ்டி ஆட்சி குறித்து கூறுவதனைப் போன்றே தெற்கு அரசியல்வாதிகள் நாடு பிளவுபடுவது பற்றி பேசுகின்றனர்.

இந்த அனைத்து பிரச்சாரங்களினதும் நோக்கம் மக்களிடமிருந்து வாக்குகளை பெற்றுக்கொள்வதேயாகும்.

எனினும் இந்த இரண்டு தரப்பினரதும் பேச்சுக்களினால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யாருக்கும் நன்மைகள் கிடைக்கவில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உலகம் அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில், இதனை விடவும் காத்திரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கைகளின் அடிப்படையில் நாடு பிளவடைவதனை அனுமதிக்காது எனவும் சுதந்திரக் கட்சியின்றி அரசியல் அமைப்பினை உருவாக்கிவிட முடியாது எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0