Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

லே வேகாஸ் விமானநிலைய எரிபொருள் தாங்கியையும் சுட்ட கொலையாளி திகிலூட்டும் புதிய தகவல்கள்…

October 7, 2017 4:10 AM
4 0
லே வேகாஸ் விமானநிலைய எரிபொருள் தாங்கியையும் சுட்ட கொலையாளி திகிலூட்டும் புதிய தகவல்கள்…

லாஸ் வேகாஸ் கொலையாளி ஸ்ரிபன் பட்டொக்கிடம் இருந்த வேறு சில நாசகாரத் திட்டங்கள் குறித்து தற்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் எப். பி .ஐ புலனாய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணைகளை நடத்திவரும் நிலையில் இந்தத் தகவல்கள் வந்துள்ளன.

தான் தங்கியிருந்த விடுதியின் 32 ஆம் மாடியிலிருந்து இசை நிகழ்ச்சியொன்றை குறி வைத்து குருரத்தாக்குதல் ஒன்றை நடத்திய அவர் 58 பேரை படுகொலை செய்து 500 க்கு மேற்பட்டோரை காயமடைய வைத்தத செய்திகள் இதுவரை செய்திகள் வந்தன.

இப்போது சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த லா வேகாஸ் அனைத்துலக விமான நிலையத்தின் எரிபொருள் களஞ்சியத்தாங்கியைக் குறிவைத்தும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியமை தெரியவந்துள்ளது.

ஸ்ரிபன் பட்டொக் சுட்ட இரண்டு ரவைகள் விமானங்களுக்கான எரிபொருள் தாங்கியை தாக்கியுள்ளன. ஆயினும் நல்லவேளையாக பேரழிவு ஒன்றும் ஏற்படவில்லை.

இதேபோலவே ஸ்ரிபன் பட்டொக்கின் வாகனத்தில் இருந்த சுமார் 50 இறாத்தல் வெடிமருந்து ( அமோனியம் நைதரேற்று) குறித்து கவனத்தைத் திருப்பியுள்ள புலனாய்வாளர்கள் அதனைமையப்படுத்திய சில ஊகங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த வெடிபொருளைக் கண்டு வாகனக்குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தும் திட்டத்தை ஸ்ரிபன் பட்டொக் கொண்டிருக்கலாமெனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி கண்காட்சி ஒன்றில் காட்சிக்கு வைக்கபட்டிருந்த ராசர் ரக ரவைகளை கொள்வனவு செய்வதற்கு ஸ்ரிபன் பட்டொக் ஆர்வப்பட்ட விடயமும் வெளிவந்துள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0