Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

லண்டன் தாக்குதலினால் மூடப்பட்ட ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

September 16, 2017 3:32 PM
1 0

பாதுகாப்பு காரணமாக மூடப்பட்ட Parsons Green ரயில் நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக லண்டன் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் Parsons Green ரயில் நிலையத்தின் ஒரு பகுதி நேற்றைய தினம் மூடப்பட்டது.

இந்நிலையில் ரயில் நிலையத்தின் பகுதி திறக்கப்படவுள்ளமை தொடர்பில் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ரயில் பயணிக்கின்ற போதிலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரயில் நிறுத்தப்படாத வகையிலேயே மாத்திரமே மூடப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து அந்த பகுதி திறக்கப்படவுள்ளதாக லண்டன் பெருநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மணித்தியாலங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் 29 பேர் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0