Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ரஷ்யா வான்வழித்தாக்குதல்: 53 பேர் பலியான பரிதாபம்

November 28, 2017 7:14 AM
2 0
ரஷ்யா வான்வழித்தாக்குதல்: 53 பேர் பலியான பரிதாபம்

சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு ரஷ்யாவும் உதவி புரிந்து வரும் நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளின் இடத்தை தாக்கி அழிக்க வான்வழித் தாக்குதல்களை நடத்துகின்றன.

இந்நிலையில் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள அல் ஷபா கிராமத்தை மீட்க ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் குடியிருப்பின் மீது நடந்த தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0