Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ரவி கருணாநாயக்கவிற்கு வீடு வழங்கிய விடயம் ஊடகங்களின் மூலமே அறிந்து கொண்டேன்! அர்ஜூன் மகேந்திரன்

October 10, 2017 5:44 PM
2 0

அர்ஜூன் அலோசியஸ், அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு வீடு ஒன்றை வழங்கியமை தொடர்பில் ஊடகங்களின் வாயிலாகவே அறிந்து கொண்டதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மொனெக் ரெசிடன்ஸில் ரவி கருணாநாயக்கவிற்கு வீடு ஒன்று வழங்கியதாக ஊடகங்களின் மூலமே அறிந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்த போது அவர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவை, தனது பேத்தியின் பிறந்த நாள் வைபவங்களின் போது சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0