Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

யாழ். வலிகாமத்தில் கொட்டும் மழை! விவசாயிகள் மகிழ்ச்சி

October 10, 2017 11:08 AM
2 0
யாழ். வலிகாமத்தில் கொட்டும் மழை! விவசாயிகள் மகிழ்ச்சி

யாழ். மாவட்டத்தின் வலிகாமத்தில் இன்று பிற்பகல் வேளையில் அடை மழை பெய்துள்ளமையால் பெரும் போக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்திருந்தாலும், இன்று வலிகாமத்தில் அடைமழை பெய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அடை மழை பெய்த குறுகிய நேரத்திலேயே வீதிகளில் நீர் வடிந்தோடுவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, யாழ். வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் விவசாயிகள் வயலை உழுது விட்டு மழைக்காக காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் வலிகாமத்தில் பெய்துள்ள அடை மழையால் வலிகாம விவசாயிகள் மகிழ்ச்சியில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0