Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

யாழில் மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கிய மைத்திரி!

February 6, 2018 1:29 AM
5 0

காங்கேசன்துறை - பருத்தித்துறை வரையான ஏபீ21 வீதி இன்று முதல் மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்.சென்ற போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

27 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வீதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட போரும், அதன் பின்னர் பாதுகாப்பு பிரச்சினையில் இருந்த இந்த வீதி தற்பொழுது 27 ஆண்டுகளின் பின்னர் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக யாழ்.மக்கள் மிகவும் சந்தோசமான செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0