Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

யாழின் சில பகுதிகளில் வியாழன், வெள்ளி மின்தடை..!!

June 12, 2018 4:47 PM
1 0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மறுதினம் வியாழக்கிழமையும்(14) , வெள்ளிக்கிழமையும்(15) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி வியாழக்கிழமை(14) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ்.குடாநாட்டின் மண்டைதீவு, மண்டைதீவு இலங்கைக் கடற்படை முகாம், அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், வேலணையின் ஒரு பகுதி, சோலாவத்தை ஆகிய பகுதிகளிலும்,

வெள்ளிக்கிழமை(15) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். குடாநாட்டின் காரைநகர் ஊரி, களபூமி, CTB, தோப்புக்காடு, நவவல, பலகாடு, Srilanka Navy ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0