Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்…!!

February 15, 2018 5:16 PM
3 0

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம் பெறப்பட்டியிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. இதே காலப்பகுதியில் இங்கு விஜயம் செய்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 3,97,122 ஆகும்.

இவர்களுள் 207927 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாவர். உடவளவ தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் 358.44 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

2,36,867 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர். ஹோட்டன் தென்னை தேசிய பூங்காவின் மூலம் 361.09 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. இங்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 345480 ஆகும்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0