Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் வாகன விபத்தில் பலி

October 12, 2017 1:19 AM
1 0
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் வாகன விபத்தில் பலி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலியின் சகோதரரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினருமான ஜப்பார் அலி (வயது 57) வாகன விபத்தில் இன்று (12) காலை பலியானார்.

நிந்தவூரைச் சேர்ந்த ஜப்பார்அலி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாமின் சகோதரருமாவார்.

நிந்தவூரிவிருந்து திருமலை சென்ற இவர்களது காரும் மூதூரிலிருந்து கிண்ணியாவிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பஸ்சும் மோதியதனால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

நேற்று கிண்ணியாப் பாலத்திற்கருகாமையிலுள்ள உப்பாறு எனுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த லாபீர் மற்றும் ஜப்பார்அலி இவர்கள் இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்படடிருந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்மைகாயினால் இன்று வியாழக்காலை காலை ஜப்பார் அலி காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0