Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன!

November 28, 2017 2:53 AM
3 0
முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன!

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில், குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை அகழும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

குறித்த அகழ்வு நடவடிக்கையை பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் .எஸ் சம்சுதீன் முன்னிலையில் நடைபெற்றது.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0