Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!!

January 5, 2019 4:45 AM
103 0

முல்லைத்தீவு, கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையிலான களப்புப் பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு குற்றம் சுமத்துகின்றார், சென்.அன்ரனிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார்.

களப்­புப் பகு­தி­யில் தற்­போது இறால், மீன் என்­பன பெருக்­கக்­கா­லம். தற்­போது எமது மீன­வர்­கள் சென்று வலை­களை விரித்து விட்டு வந்­தால், புல்­மோட்டை மீன­வர்­கள் நுழைந்து அறுத்­து­விட்டு தமது கூட்­டு­வ­லை­க­ளைப் பயன்­ப­டுத்தி தொழிலில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இந்­தச் செய­லால் எமது வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. கடல்­வ­ள­மும் அழி­வ­டை­கின்­றது -– என்­றார்.

கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இது தொடர்­பில் கேட்­ட­போது, நந்­திக்­க­ட­லில் கூட்­டு­வ­லைத் தொழி­லில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத தொழி­லில் ஈடு­பட்ட பலர் தப்­பி­யோ­டி­ய­போ­தும் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். 70 கூட்டு வலை­கள் கைப்­பற்­றப்­பட்­டன – என்­றனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0