Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மின்சாரம் தாக்கி 5 பேர் பலி: கிணற்றில் இறங்கி பழுதான மோட்டாரை தூக்கியபோது பரிதாபம்..!!

July 17, 2017 3:05 AM
3 0

மத்திய பிரதேசத்தில் ராகுநாத்புரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று மதியம் மூன்று மணியளவில் சில வாலிபர்கள் கிணற்றில் பழுதான மின்மோட்டாரை மேலே தூக்குவதற்காக சென்றனர். அப்போது இருவர் கிணற்றிற்குள் இறங்கினார்கள். இருவரும் மோட்டார் அருகில் சென்று மின் வயரை துண்டித்து மோட்டாரை மேலே தூக்குவதற்கு தயாரானார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் பலியானார்கள். உடனே கிணற்றிற்கு மேல் நின்றிருந்த மேலும் மூன்று பேர் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அவர்களும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

பழுதடைந்த மோட்டாரை கிணற்றில் இருந்து மேலே தூக்கச்சென்ற ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்கள் பசான் சிங் (30), ராம்பாபு (20), சோடேலால் (25), ஜக்மோகன் சிங் (22), தயாராம் (35) எனத் தெரியவந்துள்ளது.

ஐந்து பேர் பலியானது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0