Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு..!!

September 11, 2018 2:11 AM
1 0

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, டீசலின் புதிய விலை 123ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0