Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மஹிந்தவா? ரணிலா? என்பது 2ஆம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும்

June 12, 2018 9:21 AM
1 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் ஆட்சியமைக்கும் போது இலங்கை மீது இருந்த கடன் சுமை 2 ட்ரில்லியன் ரூபாயாகும். 10 வருட காலத்தில் இந்த கடன் 7 ட்ரில்லியனாக அதிகரித்தது.

10 வருடங்களில் 5 ட்ரில்லியன் கடன் அதிகரித்திருந்தது. அதாவது ஒரு வருடத்திற்கு 500 பில்லியன் ரூபாய் வீதமே அதிகரித்தது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2018ஆம் அண்டு ஆகும் போது நாட்டின் கடன் 11 ட்ரில்லியனாக அதிகரித்துள்ளது. 7 ட்ரில்லியனாக இருந்த கடன் 3 வருடத்திற்குள் 4 ட்ரில்லின் அதிகரித்து 11 ட்ரில்லியனாகி விட்டது.

யார் அதிகம் கடன் வாங்கியுள்ளது? மஹிந்தவா அல்லது ரணில் தலைமையிலான நல்லாட்சியா என்பது 2ஆம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட கடனுக்கு 2025ஆம் ஆண்டு நாம்மால் உருவாக்கப்படவுள்ள ஆட்சியிலேயே பதில் கூறவேண்டி வரும். இந்த கடன் மலைக்கு பலியாகப் போவது எமது ஆட்சியே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0