Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மலையகத்தில் ஆரம்பமாகவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம்

July 22, 2017 10:50 AM
15 0
மலையகத்தில் ஆரம்பமாகவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம்

ஒரு காலப் பகுதியில் விவசாய துறைக்கு வழங்கப்படும் நிதிகள் அல்லது வசதிகள் எதுவும் தோட்டப்புறங்களுக்கு வழங்கப்படவில்லை. நான் மத்திய மாகாண அமைச்சாராக பொறுபேற்ற பின்பு தான் அனைத்து விடயங்களையும் தோட்டங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நீர் வளத்தினை பயன்படுத்தி சூழுலுக்கு ஏற்ற வகையில் நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவித்து, தோட்டத் தொழிலாளர்களின் போசனை மட்டத்தை விருத்தி செய்யும் நோக்கில் நன்னீர் மீன் வளர்ப்புக்கான கிடங்கு வெட்டுவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

நன்னீர் மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் பேசி எடுத்ததிற்கிணங்க இன்று 500 லட்சம் ரூபா நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக வருமானத்தினை பெற்று வறுமையை ஒழிக்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் இந் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரதன், விக்டன், கரோலிணா, டன்சினன், நயப்பன, மிஸ்டில் ஆகிய தோட்ட முகாமையாளர்களுக்கு இத்திட்டம் செயற்படுத்துவதற்குரிய 335 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன் பன்மூர் குளத்தில் அதிதிகளால் மீன் குஞ்சுகளும் விடுவிக்கப்பட்டன.

மேலும் மத்தியமாகாண அமைச்சர் ரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் டப்ளியூ ஜே.ரணசிங்க, நீர் வள அமைச்சின் தலைவர் சட்டத்தரணி, உபாலி மோட்டி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0