Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மரம் முறிந்து விழுந்ததில் ஏ9 வீதியின் போக்குவரத்து பாதிப்பு

September 28, 2017 9:44 AM
1 0
மரம் முறிந்து விழுந்ததில் ஏ9 வீதியின் போக்குவரத்து பாதிப்பு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய வளாகத்தினுள் இருந்த மரமொன்று இன்று பிற்பகல் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்து இருந்ததுடன், தொலைபேசி மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் அறுந்து விழுந்துள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த போதும் இதுவரையில் சம்பவ இடத்திற்கு எவரும் வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொதுமக்களின் உதவியுடன் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு வீதியின் ஓரத்தில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0