Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மட்டு. நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல்!

October 12, 2017 8:29 AM
2 0
மட்டு. நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலேயே இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

‘இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகக்கூறி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை காணி ஆணையாளர் தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது யோகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0