Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மட்டக்களப்பில் 1000இற்கும் அதிகமான விவசாயிகள் பாதிப்பு

March 13, 2018 5:59 AM
8 0

மட்டக்களப்பு - வெள்ளாவெளி பகுதியைச் சேர்ந்த 1000 இற்கும் அதிகமான விவசாயிகள், அதிகாரிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வெள்ளாவெளியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் அங்குள்ள சிறு நீர்த்தேக்கங்களுக்கான நீரை, அம்பாறை - இங்கினியாகலை நீர்விநியோகத் திட்டத்தில் இருந்து விநியோகிப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் நீர்விநியோகத்தை மேற்கொள்ள மறுத்து வந்திருப்பதாகவும், இந்த விடயத்தில் தங்களது அரசியல் தலைமைகள் முறையாக செயற்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இங்கினியாகல நீர் விநியோகத் திட்டமானது, கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0