Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மகாதேவா சிறுவர் இல்லத்தில் நடப்பவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

December 5, 2017 2:29 PM
1 0

கிளிநொச்சி- மகாதேவா சிறுவர் இல்லத்தில் என்ன நடக்கிறது என மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களும் இணைந்து விசாரணை நடத்தி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடாக சபைக்கு சமர்ப்பிக்கும்படி அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாண சபையின் 111வது அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் மேற்படி மகாதேவா சிறுவர் இல்லம் தொடர்பான பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டு வந்தார்.

மேற்படி பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியிலேயே அவை தலைவர் இவ்வாறு உத்தரவை பிறப்பித்திருக்கின்றார்.

மாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மே ற்படி சிறுவர் இல்லத்தில் தற்போது பாரிய பிரச்சினைகள் நடந்து வருகின்றது எனவும் அந்த சிறுவர் இல்லத்தில் 366 சிறுவர்கள் தங்கியிருக்கும் நிலையில் தற்போது சிறுவர் இல்லத்தை தலமை தாங்கி வருபவர் இந்த மாதம் 14ம் திகதி வரையிலேயே சிறுவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய நிலை இருப்பதாக தமக்கு கூறியுள்ளார் என கூறினார்.

மாகாண உள்ளக கணக்காய்வு பகுதியினரையும், மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் அமைச்சு ஆகியவற்றையும் இணைத்து குழு ஒன்றை உருவாக்கி அங்கு என்ன நடக்கிறது என்பதை விசாரணை நடத்தி அறிக்கையை முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரனுக்கு சமர்ப்பித்து முதலமைச்சர் ஊடாக சபைக்கு சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0