Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பொலிஸார் எங்களை கைதுசெய்துவிட்டார்கள்! ஐ.நாவிடம் கூறுகிறார் நாமல்

October 10, 2017 4:51 PM
1 0

தாம் கைதுசெய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறுபேர் சற்று முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ச, தமது டுவிட்டவர் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்காக இலங்கை பொலிஸார் தாம் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளதாக நாமல் ராஜபக்ச தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0