Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பால்வினை நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

September 16, 2017 7:58 AM
1 0

பாலியல் ஊடாக பரவும் பால்வினை நோயான ஹெர்பீஸ் என்ற நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெர்பீஸ் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் ஊடாக பரவும் நோய்களில் பீடிக்கப்பட்டவர்களின் அதிகளவானோர் ஹெர்பீஸ் என்ற நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 முதல் 35 வயது உட்பட்டவர்கள் அதிகளவில் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் பால்வினை நோய்களுக்காக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சிசிர லியனகே கூறியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0