Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் தீர்மானம் கிடையாது..!!

October 10, 2017 8:00 AM
1 0

Detained former Sri Lankan Army Chief General Sarath Fonseka (front row) and former Sri Lankan cricket captain and Democratic National Alliance Member of Parliament Arjuna Ranatungawaves attend parliament for the inauguration of the assembly in Colombo on April 22, 2010. Fonseka, who is being court martialled, called for the “rule of law” in an attack on President Mahinda Rajapakse after being taken from custody to attend the opening of parliament in which he won a seat at polls two weeks ago. AFP PHOTO/ Lakruwan WANNIARACHCHI. (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

நேற்று (09) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்ந்தன எழுப்பிய கேள்வியின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

´இந்த நிறுவனம் எங்கள் நாட்டினுடைய அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செலுத்தும் நிறுவனம்.

அத்தோடு தேசிய சக்தி வளங்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைப்பாக இந்த நிறுவனம் திகழ்கின்றது.

நான் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் முழுநாட்டு மக்களுக்கும் பொறுப்பு உள்ளது.

இந்த நிறுவனத்தை பலமிக்க நிறுவனமாக மாற்றுவது தொடர்பாக. நான் இது தொடர்பாக உறுதியுடன் உள்ளேன்.´ என்று அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எமது நாட்டில் கடந்த ஜனவரி 22, 2015 முதல் எரிபொருள் விலை பெரிதும் குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் இலக்கை அடைய முடிந்தது.

´குறிப்பாக ஜனவரி 22, 2015 இல் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலையை ரூ.150 தில் இருந்து ரூ. 117 ரூபாயாக குறைக்கப்பட்டது. ரூ.33 ஆகா குறைக்க முடிந்தது.

95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலையை ரூ.158 தில் இருந்து ரூ. 128 ரூபாயாக குறைக்கப்பட்டது. ரூ.30 யாக குறைக்க முடிந்தது.

ஓடோ டீசல் ரூ.111 இருந்து 95 ரூபாவாக குறைக்கப்பட்டு ரூ.16 வாக குறைக்கப்பட்டது. சுபர் டீசல் ரூ. 133 இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டு ரூ. 23 வாக சேமிக்கப்பட்டது.

குறிப்பாக மண்ணெண்னை ரூ. 81 இருந்து 44க்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.37 சேமிக்கப் முடிந்தது.

இந்த விலைக் குறைப்பினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெறும் நட்டம் ஏற்பட்டதையும் நான் இங்கு தெரிவிக்கவேண்டும்.

ஆனாலும் சர்வதேச மசகு எண்ணையின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0