Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பாரிய நெருக்கடியில் இலங்கை அரசாங்கம்! ஏ.பி மீண்டும் வெளியிட்ட சித்திரவதை காட்சிகள்

November 13, 2017 3:23 AM
1 0
பாரிய நெருக்கடியில் இலங்கை அரசாங்கம்! ஏ.பி மீண்டும் வெளியிட்ட சித்திரவதை காட்சிகள்

இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பில் சாட்சியங்கள், ஆதாரங்களை அசோசியேட்டட் பிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்த நிலையில், வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுள்ள தமிழர்களிடம் கருத்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையில் சமாதானம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட ஆதாரங்களை அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0