Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பிரபஞ்ச அழகிகளில் ஒருவராக தெரிவான இலங்கை யுவதி!

November 28, 2017 2:25 AM
3 0
பிரபஞ்ச அழகிகளில் ஒருவராக தெரிவான இலங்கை யுவதி!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி 16 பேருக்குள் இலங்கை பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கிறிஸ்டினா பீரிஸ் என்பவரே அந்த போட்டியில் 16வது இடத்தை பிடித்துள்ளார்.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.

1955ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த பின்னர் இலங்கை உயர் இடம் ஒன்றை பிடித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

23 வயதான கிறிஸ்டினா மாடல் அழகியாக எமிர் நாட்டில் செயற்பட்டு வருகின்றார்.

போட்டி மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிறிஸ்டினா செலவிடுகின்றார். அவரது தாயார், பாட்டி மற்றும் தாத்தா ஆகியோர் புற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்டினா 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரபஞ்ச போட்டிக்கான இலங்கை போட்டியில் முதல் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0