Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பாயில் படுத்துறங்கும் அர்ஜூன் அலோசியஸ்!

February 6, 2018 2:01 AM
5 0

பெர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் பாயில் உறங்குவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் தடுத்து வைத்துள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாயில் உறங்குவதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சக சிறைக் கைதிகளுடன் அர்ஜூன் அலோசியஸ் பேசுவதனை தவிர்த்துக் கொண்டுள்ளார் என சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளை பார்வையிடும் நேரங்களில் அவர்களின் உறவினர்களினால் அவர்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலையில் வேறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0