Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புதிய ஆளுநரின் ஜனாதிபதியுடனான சந்திப்பு- முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

October 10, 2017 5:35 AM
3 0
புதிய ஆளுநரின் ஜனாதிபதியுடனான சந்திப்பு- முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட பன்வாரிலால் புரோகித், டெல்லிக்கு சென்று இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைகுடியரசுத் தலைவர் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) டெல்லி சென்றிருந்த பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில், எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறும் ஆளுநர்களின் மாநாட்டில் பங்கேற்கும் பன்வாரிலால் புரோகித், அதன் பின்னர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகின்றது.

அசாம்மாநில ஆளுனராக செயற்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித், கடந்த 30 ஆம் திகதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன், கடந்த 6 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0