Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

February 10, 2018 7:37 PM
8 0
புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஅமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.

ஆதாரம்: eeladhesam.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0