Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பிணைமுறி மோசடியாளர்களைத் தண்டிக்க வலியுறுத்தி பௌத்த தேரர் ஒருவர் சத்தியாக்கிரகம்

February 6, 2018 7:26 AM
8 0

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஜனாதிபதியின் ஆலோசகரும், ஊழலுக்கெதிரான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளருமான உலபனே சுமங்கள தேரர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், இன்றைய தினம் தொடக்கம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அவர் தன் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அவரது சத்தியாக்கிரகப் ​போராட்டத்துக்கு பல்வேறு சிவில் அமைப்புகளும் ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிணைமுறி மோசடியாளர்கள் தண்டிக்கப்படும் வரை கண்டன ஊர்வலங்கள், பேரணிகள் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக உலபனே சுமங்கள தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0