Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பங்காளிக் கட்சிகள் தனித்தனியே போட்டியிட மைத்திரி பச்சைக்கொடி

December 5, 2017 3:59 PM
1 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நிறைவேற்றுச் சபை இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, தேசிய காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்குமாறு பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0