Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு 69 வேட்பு மனுக்கள் தாக்கல்! ஒன்று நிராகரிப்பு

December 21, 2017 2:32 PM
96 0
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு 69 வேட்பு மனுக்கள் தாக்கல்! ஒன்று நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களும், ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குமான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 69 வேட்பு மனுக்களில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஜந்து அரசியல் கட்சிகளும் யூ.என்.அத்தநாயக்க தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசியகட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆகிய நான்கு அரசியல் கட்சியும் இளங்கன் திலக்க தலைமையிலான ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி, லங்கா சம சமாஜ கட்சி, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஏழு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சமசமாஜ கட்சி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகளும் பி.எச்.பிரியசாந்த, பி.கே.ரொஹான் தலைமையிலான இரண்டு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகளும் ருவான் பத்திரண தலைமையிலான ஒரு சுயேச்சை குழுவும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஜக்கிய மக்கள் கட்சி, ஆகிய ஏழு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

சுதந்திர முன்னணி ஆகிய 8 அரசியல் கட்சிகளும் நிமல் குமாரதுங்க தலைமையிலான ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி ஆகிய ஜந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

நுவரெலியா பிரதேச சபையில் போட்டியிடும் லங்கா சம சமாஜ கட்சியின் வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யாமையின் காரணமாக அதன் பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் 26 பேர் பெயர் குறிப்பிட வேண்டிய நிலையில் 25 பேரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

இதே வேளை, ஹட்டன் டிக்கோயா நகர சபையில் போட்டியிடுவதற்காக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு வேட்பாளரும், அம்பகமுவ பிரதேச சபையில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பில் ஒரு வேட்பாளரும், நோர்வூட் ஜக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்களும்,

கொட்டகலை பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருவரும் ஜக்கிய மக்கள் கட்சியில் ஒருவரும் வலப்பனையில் ஜக்கிய மக்கள் கட்சி சார்பில் மூவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அமைச்சர்களும் ,நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி ஆதரவாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0