Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நேற்றிரவு மைத்திரியை சந்தித்த ரணில்! பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயார்

February 15, 2018 8:11 AM
6 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனக்கு அறிவித்துள்ளதாகவும் நாளைய தினம் வரை அவர்களுக்கு காலஅவகாசத்தை வழங்க தான் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியுள்ளார்.

இதற்கு ஜனாதிபதியிடம் பதிலளித்த பிரதமர், தான் தற்போது பிரதமராக பதவி வகிப்பதால், புதிதாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.

முடிந்தால், நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறும், அவ்வாறு முடியாது போனால், தான் செய்ய போவதை வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதியிடம் , ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாளை மற்றும் நாளை மறுதினம் ஜனாதிபதி, ஊடகங்களில் பிரதானிகளுடனான விசேட சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0