Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நான் தமிழ் மச்சான்சைதான் திருமணம் செய்வேன் – நமீதா

July 15, 2017 1:18 PM
3 0
நான் தமிழ் மச்சான்சைதான் திருமணம் செய்வேன் – நமீதா

மச்சான்ஸ் நடிகை நமீதாவை யாரும் மறக்க முடியாது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நேற்று பேசும்போது தமிழ்நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். மேலும் திருமண விஷயத்தில் என் பெற்றோர் கூறும் மாப்பிள்ளையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

இதனை கேட்ட ஆர்த்தி கூறும்போது, பாருங்கள் நமீதா ஒரு தமிழ் இளைஞரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார். விருப்பம் உள்ள இளைஞர்கள் விண்ணபிக்கலாம். இல்லை என்றால் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து நமீதாவை பெண் கேட்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது நமீதா தமிழ்நாட்டு மருமகளாகத்தான் செல்வார் என்று கூறினார். அதே போல ரைசாவும் தமிழ் இளைஞரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0