இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தால், அண்மையில் அங்கு ஏற்பட்ட அமளியை தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருணாகல் நகரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 26 பிரதிகளை எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அறிக்கையின் 26 பிரதிகளை நாடாளுமன்றத்திற்கு வழங்குமாறு நாடாளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஜனாதிபதி செயலகம், ஆணைக்குழுவின் அறிக்கையின் 50 பிரதிகளை இதுவரை அச்சிட்டுள்ளது. இதில் 26 பிரதிகளே நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளன.
ஆதாரம்: tamilwin.com