Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நாடாளுமன்றத்தை கலைப்பதில் சட்ட சிக்கல்! நான்கரை ஆண்டுகள் ஆட்சி தொடரும்

February 13, 2018 2:55 AM
5 0

நான்கரை ஆண்டு செல்லும் வரையில் நாடாளுமன்றை கலைக்க முடியாது என ஐக்கிய இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு திருத்தங்களின் அடிப்படையில் நாடாளுமன்றம் நிறுவப்பட்டு நான்கரை ஆண்டுகள் செல்லும் வரையில் ஜனாதிபதியினாலேயே நாடாளுமன்றை கலைக்க முடியாது.

நாடாளுமன்றை கலைக்குமாறு ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் யோசனை முன்வைக்கப்பட்டால் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்றிற்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற பதவிக் காலத்தை நிர்ணயம் செய்ய முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு எதனைப் பேசினாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறைந்தளவு வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது.

கிராமங்களின், நகரங்களின் நிர்வாகத்திற்காகவே இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டதே தவிர, நாடாளுமன்றத்தில் மாற்றம் செய்யவல்ல.

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறுபட்ட தீர்மானத்தை இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ளனர்.

இதனை புரிந்து கொண்டு அரசாங்கம் தனது குறைகளை நிவர்த்தி செய்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமென ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0